இந்த வாரம் 30-11-2009 மொத்தம் 3 போட்டிகள் நடைபெற்றன. டேஷேஸ் கோப்பையை வெல்ல செல்வா மற்றும் ஜாவீத் அணியினர் மோதினர். மிகவும் பர பரப்பாக நடைபெற்ற இத்தொடரில் செல்வா அணியினர் 2 க்கு 1 என்று டேஷேஸ் கோப்பையை வென்றனர். போட்டி விவரம் வருமாறு:
முதல் போட்டி (6 overs)
ரசிகர்களின் பலத்த ஆரவாரத்தின் இடையே இரு அணியினரின் கேப்டன்கள் டாஸ் போட சென்றனர். முதல் போட்டியில் செல்வா டாஸ் வென்று தமது அணி பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். துவக்க வீரர்களாக களம் இறங்கிய வடிவேல் மற்றும் பத்மநாபன் நன்றாக ஆடினார்கள். ஜாவீத் அணியில் புது முகம் சூர்யபாபு இடம் பெற்றார். அவர் மிகவும் துடிப்புடன் பந்து வீசினார். செல்வா அணியினர் வெற்றிக்கு 27 ரன்கள் நிர்ணயித்தனர். இதை chase செய்ய ஜாவீத் அணியினர் மிகவும் திணறினார்கள். பத்மநாபன் அற்புதமாக பந்து வீசி 2 விக்கெட்களை முதல் ஓவரில் வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டார். ஜாவீத் அணி இறுதியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றனர்.
இரண்டாவது போட்டி (8 ஓவர்)
இப்போட்டியிலும் செல்வா டாஸ் வென்று தமது அணி பேட்டிங் செய்யும் என்று கூறினார். வழக்கம் போல பத்மநாபன் மற்றும் வடிவேல் துவக்க ஆட்ட காரர்களாக களம் இறங்கினர். அடுத்து ஆட வந்த ரவிசங்கர் சூர்யாவின் பந்து வீச்சில் கிளீன் போல்ட் ஆனார். செல்வா ஜாவீத் பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இறுதியில் 30 ரன்களை இலக்காக நிர்ணயித்தார்கள். இதை விரட்டிய ஜாவீத் அணியினர் மறுபடியும் சொதப்பினர். சூர்யா மற்றும் ஜாவீத் இருவரும் சிக்ஸர் அடிக்க ஆசை பட்டு கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்கள். கடைசி விக்கெட்டிற்கு ஆடிய அருள் ராஜ் அதிரடியாக ஆடினார். பர பரப்பான கட்டத்தில், 2 ஓவரில் 12 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற சூழ்நிலையில் செல்வா பந்து வீச வந்தார். அவர் வீசிய இரண்டாவது பந்தில் அருள் ராஜ் சிக்ஸர் அடிக்க முயற்சி செய்து வடிவேல் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இத்துடன் டேஷேஸ் கோப்பையை வெல்லும் ஜாவீத் அணியனரின் கனவு தகர்ந்தது.
3 வது போட்டி (8 ஓவர்)
இந்த முறை டாஸ்-இல் ஜாவீத் வெற்றி பெற்றார். அவர் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இப்போட்டியில் துவக்க ஆட்ட காரர்களாக களம் இறங்கிய சூர்ய பாபுவும் அருள் ராஜும் செல்வா அணியினரின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். அறிமுக வீரரான சூர்யா ரசிகர்களுக்கு வான வேடிக்கை காட்டினார். டேஷேஸ் வரலாறில் சங்கருக்கு அடுத்து longest சிக்ஸ் அடித்தவர் என்ற பெருமையை சூர்யபாபு பெற்றார். ஜாவீத் வழக்கம் போல அதிரடி ஆட்டம் ஆட முயற்சி செய்து தனது விக்கெட்டை இழந்தார். இறுதியில் அவரது அணி 55 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இதை விரட்டிய செல்வா அணியினரின் துவக்க ஆட்ட காரர்கள் வடிவேல் மற்றும் பத்மநாபன் நன்றாக ஆடினார்கள். முதல் விக்கெட்டுக்கு வடிவேல் அவுட் ஆனார். பின்னர் ஆட வந்த ரவிஷங்கரும் ரசிகர்களை ஏமாற்றினார். கடந்த வாரத்தை போல இந்த வாரமும் அவர் வான வேடிக்கை காட்டுவார் என எதிர் பார்த்த ரசிகர்களுக்கு மிகவும் ஏமாற்றமே மிஞ்சியது. அவர் விரைவில் அவுட் ஆனார். கேப்டன் செல்வா டக் அவுட் ஆகியது போட்டியை விறு விறுப்பாகியது. கடைசி விக்கெட்டாக ஆடிய பத்மநாபன் தனி ஆளாக நின்று போராடினார். வெற்றியின் விளிம்பு வரை தனது அணியை அழைத்து சென்ற அவர், 10 பந்தில் வெறும் 4 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் அவுட் ஆனார். சூர்ய பாபுவின் பந்து வீச்சில் 6 அடித்து போட்டியை முடிக்க நினைத்து பந்தை தூக்கி அடித்தார். நிச்சயம் சிக்ஸ் என்று அனைவரும் ஆவலுடன் பார்த்து கொண்டிருக்கும் போது கேப்டன் ஜாவீத் அற்புதமாக கேட்ச் செய்து அனைவரையும் ஆச்சர்யத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தினார்.
இறுதியில் செல்வா அணியினர் டேஷேஸ் கோப்பையை 2 க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றினர்.
அமெரிக்க அதிபர் ஒபாமா வெற்றி கேப்டன் செல்வாவிற்கு டேஷேஸ் கோப்பையை வழங்கினார். தொடர் நாயகன் விருது பெற்ற அறிமுக வீரர் சூர்ய பாபுவிற்கு அதிபர் ஒபாமா தங்க பேட்-டை பரிசாக அளித்தார்.
இந்த வார டேஷேஸ் சீரீஸ் - சிறப்பம்சங்கள்:
1. இந்த வாரம் பல வீரர்கள் போட்டிக்கு வர வில்லை. அதிரடி ஆட்டக்காரர் அமர்நாத், "தென்னிந்தியாவின் ஜான்டி ரோட்ஸ்" ராஜ் குமார், முன்னாள் கேப்டன் ஜோசப், இடது கை பந்து வீச்சாளர் பர்வதநாதன், அலட்டி கொள்ளாத வீரர் ஜெபசீலன், நாராயணன், வினோத், கார்த்திக், சங்கர், இளங்கதிர், பழனி, யூசூப், ஸ்ரீராம் மற்றும் ராமலிங்கம் ஆகியோர் இந்த வாரம் போட்டியில் கலந்து கொள்ள வில்லை.
2. போட்டிக்கு டிக்கெட் கிடைக்காததால் ஆயிரகணக்கான ரசிகர்கள் ஸ்டேடியம் வெளியே நீண்ட நேரம் காத்து இருந்தனர்.
3. இந்த போட்டியில் புது முகம் சூர்ய பாபு களம் இறங்கினார். இவரது மாமா தான் செல்வா. இதன் மூலம் டேஷேஸ் தொடரில் பங்கேற்ற முதல் மாமன் - மச்சான் என்ற பெருமையை செல்வா & சூர்யா பெற்றனர்.
4. செல்வா 3 போட்டியிலும் ஜாவீத் இடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆகி கடுப்பேற்றினார். அவர் இத்தொடரில் 3 போட்டிகள் விளையாடி வெறும் 2 ரன் மட்டுமே எடுத்தார். இருந்தாலும் பத்மநாபன், வடிவேல் மற்றும் ரவிஷங்கரின் ஆல் ரவுண்டு திறமையினால் கோப்பையை வென்றனர்.
5. ஜூஸ் கடை ஏனோ மூடி இருந்தது. இதனால் வீரர்கள் பெரும் அவதி பட்டனர்.
6. செல்வா பந்து வீசிய போது யோகேஷுக்கு பட கூடாத இடத்தில் பந்து பட்டது. யோகேஷ் வலியை பொருட்படுத்தாமல் "மணியே... மணியின் ஒலியே..." என்று situation song பாடி அனைவரையும் சிரிக்க வைத்தார்.
7. ரவி ஷங்கர் வழக்கம் போல ஒரு பந்தை ரயில்வே ட்ராக்கில் அடித்தார்.
8. மழை 3 வது போட்டியின் போது சிறுது பெய்ய தொடங்கியது. வீரர்கள் அனைவரும் அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து விளையாடியது ரசிகர்களை மிகவும் நெகிழ செய்தது.
9. மூன்று போட்டியிலும் டாஸ் வென்ற அணியே போட்டியை வென்றது.
தவிர்க்க முடியாத காரணங்களால் உடனடியாக வர்ணனையை வெளியிட முடியவில்லை. மிகவும் தாமதமாக வர்ணனைகளை தந்ததற்கு மிகவும் வருந்துகிறோம்.
மீண்டும் அடுத்த வாரம் TCG யில் சந்திப்போம். நன்றி வணக்கம்.
No comments:
Post a Comment