Sunday, December 6, 2009

MATCH UPDATE (7th December 2009)

வணக்கம் நண்பர்களே,

இன்று (7-12-2009) டேஷேஸ் கிரிக்கெட் போட்டிகள் கோலாகலமாக TCG யில் நடை பெற்றது. இந்த வாரம் நமக்கு Fantastic climate, fantastic ground and fantastic players கிடைத்தது. வழக்கம் போல 3 போட்டிகள் நடைபெற்றன.

இரு அணிகள் ராஜ்குமார் மற்றும் ஜெபசீலன் தலைமையில் அணிவகுத்து நின்றன. அவர்கள் அணி விவரம் வருமாறு:

ராஜ்குமார் அணி:

ரவிசங்கர்
சூர்ய பாபு
ராஜ்குமார்
அருள் ராஜ்
குமார்
லக்ஷ்மணன் (3 வது போட்டி மட்டும்)
சங்கர்

ஜெபசீலன் அணி:

பத்மநாபன்
வடிவேல்
செல்வா
ஜெபசீலன்
அருண்குமார் (டேஷேஸ் நிறுவனர்)
கார்த்திக் J

1st Match (8 Overs)

ஜெபசீலன் டாஸில் வெற்றி பெற்று பேட்டிங்கை தேர்வு செய்தார். அவரது அணி ராஜ்குமார் அணியினரின் அனல் கக்கும் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 17 ரன்களுக்குள் சுருண்டனர். அவரது அணியில் ஒருவர் கூட நன்றாக ஆடவில்லை. பின்னர் ஆடிய ராஜ்குமார் அணி இந்த இலக்கை 5 ஓவரில் அடைந்தது. ரவிசங்கர் அடுத்தடுத்து 2 சிக்ஸர் விளாசி போட்டியை சப்பையாக முடித்தார். ராஜ்குமார் அணி கடைசியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் இந்த போட்டியை வென்றது.

2 nd Match (8 Overs)

இந்த போட்டியிலும் டாஸில் வெற்றி பெற்று மறுபடியும் தனது அணி பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். இந்த முறையும் அவரது அணியினரால் ஒன்றும் பெரியதாக அடிக்க முடியவில்லை. அவர்கள் வெறும் 14 ரன்களே எடுத்தனர். இதை சேஸ் செய்த ராஜ்குமார் அணி அபார வெற்றி பெற்றது. அவர்கள் செல்வா வீசிய முதல் ஓவரிலேயே இந்த ஸ்கோரை எடுத்தனர். ரவிசங்கர் இந்த போட்டியிலும் அடுத்தடுத்து 2 சிக்ஸர் அடித்து அமர்களப்படுத்தினார். ராஜ்குமார் அணி 2 -௦0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றனர். ரவிசங்கர் ஆட்ட நாயகனாக தேர்ந்து எடுக்க பட்டார்.

3rd Match (10 Overs)

ஜெபசீலன் அணி பலவீனமாக இருந்ததால் சங்கர் அவரது அணிக்கு வந்தார். இதற்கு பதில் கார்த்திக் J ராஜ்குமார் அணியை பலபடுத்த சென்றார். இடையில் போட்டிக்கு வந்த லக்ஷ்மணன் ராஜ்குமார் அணிக்கு சென்றார்.

இந்த போட்டியில் ராஜ்குமார் டாஸில் வெற்றி பெற்று பேட்டிங்கை தேர்வு செய்து தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். முதலில் தடுமாறிய ராஜ்குமார் அணி பின்னர் சுதாரித்து விளையாடி 37 ரன்கள் எடுத்தது. ரவிசங்கர் இந்த போட்டியிலும் 2 சிக்ஸர் அடித்தார். அவரை ஜெபசீலன் அற்புதமான பந்து வீசினால் கிளீன் போல்ட் ஆக்கினார். சங்கர் பந்து வீச்சில் அனல் பறந்தது.

இந்த ஸ்கோரை சேஸ் செய்து இந்த போட்டியில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்று ஜெபசீலன் அணியினர் களம் இறங்கினர். ஜெபசீலனும், சங்கரும் துவக்க ஆட்ட காரர்களாக இறங்கினர். ஜெப சீலன் ரன் எடுக்க மிகவும் சிரம பட்டார். ஒரு முனையில் சங்கர் நிதானமாக விளையாட மறு பக்கம் விக்கெட் மளமள வென்று விழுந்தது. வெற்றி பெற வெறும் 12 ரன்கள் தேவை என்ற நிலையில் சங்கர் அவுட் ஆனது ஜெபசீலன் அணிக்கு பெருத்த அடியாக விழுந்தது. செல்வாவும் பொறுப்பற்ற முறையில் சூர்ய பாபுவின் பந்து வீச்சில் கிளீன் போல்ட் ஆனார். தனி ஆளாக அருண் குமார் போராடினார். இவர் இதே போன்று பல முறை தனது அணியை தனி ஆளாக நின்று வெற்றி பாதைக்கு அழைத்து சென்றிருக்கிறார். இந்த முறையும் இவர் சாதித்து காட்டுவார் என அனைவரும் ஆவலுடன் எதிர் பார்த்து இருந்தனர்.

கடைசி ஓவரில் வெறும் 2 ரன்கள் தேவை என்ற நிலையில் அருண் சிக்ஸர் அடிக்க முயற்சி செய்தார். சூர்ய பாபு அந்த பந்தை அற்புதமாக கேட்ச் செய்து ஜெபசீலன் அணியின் வெற்றி கனவை தகர்த்து எறிந்தார். இறுதியில் ராஜ்குமார் அணியினர் 1 ரன் வித்தியாசத்தில் மயிரிழையில் வெற்றி பெற்றனர். அவுட் ஆனதும் அருண்குமார் கண் கலங்கினார்.

டேஷேஸ் கோப்பையை ராஜ்குமார் அணி 3 க்கு 0 என்ற கணக்கில் அபாரமாக கைப்பற்றியது.

வீரர்களின் கூட்டு முயற்சியாலேயே எங்களால் டேஷேஸ் கோப்பையை வெல்ல முடிந்தது என்று வெற்றி பெற்ற கேப்டன் ராஜ்குமார் கூறினார். தோல்வி குறித்து ஜெபசீலன் கூறும் போது பிட்ச் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது என்றும் தங்கள் அணியில் யாரும் பொறுப்பாக விளையாட வில்லை என்று வருத்தம் தெரிவித்தார்.

ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது இரண்டும் ரவிஷங்கருக்கு வழங்க பட்டது.

பின்னர் நிருபர்களிடம் பேசிய ரவிசங்கர் தனக்கு கேப்டன் ராஜ்குமார் மிகவும் ஊக்கம் அளித்ததாகவும், எவ்வாறு பேட்டிங் செய்ய வேண்டும் என்று Coach கேரி கிர்ஸ்டன் கொடுத்த Tips களினாலும் தான் நன்றாக ஆட முடிந்தது என்று தெரிவித்தார்.

இந்த வார டேஷேஸ் இன் சிறப்பம்சங்கள்:

* கடந்த வாரம் மூடி இருந்த juice கடை இன்று திறந்து இருந்தது.

* மழை காரணமாக மைதானம் சிறிது ஈரமாக இருந்தந்து.

* ரவிசங்கர் ஒவ்வொரு போட்டியிலும் தலா இரண்டு சிக்ஸர் அடித்தார். மொத்தம் 6 சிக்ஸர்கள் இன்று அவர் அடித்தார். வேறு யாரும் சிக்ஸர் அடிக்க வில்லை.

* செல்வா out-of-form இல் இருப்பதால் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். ஜெபசீலன் கேப்டன் பதவியை ஏற்றார்.

* ராஜ்குமார் மிகவும் aggressive ஆக captainship செய்தார். அதனால் அவரது அணி 3-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது.

* அருள் ராஜ் கடந்த வாரம் கீழே விழுவது போன்று கனவு கண்டாராம். அதே போல இன்று விளையாடும் போது கீழே விழுந்து வாரினார்.

* அனைத்து போட்டிகளுக்கும் தொடர்ந்து வந்த ஒரே வீரர் என்ற பெருமையை ஜாவீத் கான் இழந்தார். அவர் இன்று தூங்கி விட்டதால் போட்டிக்கு வர வில்லை. இது வரை அவர் மட்டுமே அனைத்து போட்டிகளுக்கும் தவறாது வந்த ஒரே வீரர்.

* சங்கர் மட்டும் தான் இன்று பந்தை boundary க்கு அடித்தார். அவரது பந்து வீச்சும் அனல் கக்கும் படி இருந்தது.

* கடந்த வாரம் கலக்கிய பத்மநாபன் மற்றும் சூர்ய பாபு இருவரும் இந்த வாரம் கலக்க வில்லை.

* 3 வது போட்டியில் செல்வா அவரது மச்சான் சூர்ய பாபுவை கிளீன் போல்ட் செய்தார். பதிலுக்கு செல்வா பேட்டிங் செய்யும் போது சூர்ய பாபு செல்வாவை கிளீன் போல்ட் செய்து பழிக்கு பழி தீர்த்தார்.

* போட்டியின் நடுவே ரவிசங்கர் அனைவருக்கும் வடை விருந்து வைத்தார். அந்த மசால் வடை சாப்பிட்டதால் Fielding செய்த ஜெபசீலன் அணியினருக்கு தாகம் எடுத்தது.

* செல்வா, ஜெபசீலன், பத்மநாபன் மற்றும் சங்கர் இவர்கள் அனைவரும் out-of-form இல் இருந்தனர். குறிப்பாக செல்வா மற்றும் ஜெபசீலன் பேட்டிங் இல் சொதப்பினர்.

* புதிதாக captain ஆகி 3-0 என்று டேஷேஸ் கோப்பையை கைப்பற்றிய ராஜ்குமாருக்கு ஜனாதிபதி பிரதிபா பாட்டில் வாழ்த்து தெரிவித்தார்.

மீண்டும் அடுத்த வாரம் இதே இடத்தில் சந்திப்போம். அது வரை உங்களிடம் இருந்து விடை பெறுகிறோம்.

நன்றி வணக்கம்.

My Other Blog: RARE COINS

No comments:

Post a Comment