Tuesday, January 26, 2010

DASHES - MATCH UPDATES (25-01-2010)

உலக கிரிக்கெட் ரசிகர்கள் நீண்ட நாள் எதிர் பார்த்த இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளை போல சுவாரசியம் உடைய யூசூப் அணி மற்றும் ஜாவீத் அணியினரின் போட்டி 25-1-2010 அன்று TCG யில் நடைபெற்றது. ஆனால் இந்த முறை யூசூப் காயம் காரணமாக அணியில் இடம் பெற வில்லை. இந்த முறை முத்துகிருஷ்ணன் கேப்டன் பொறுப்பை ஏற்றார். இது வரை TCG யில் தொடரை வென்றதில்லை என்ற குறையை போக்க வேண்டும் என்று மிகவும் பலமான அணியினை தயார் செய்து வந்தனர். இருந்தாலும் ஜாவீத் அணியினரை வீழ்த்த அவர்களால் முடியவில்லை. வழக்கம் போல இந்த தடவையும் தொடரை இழந்து வேதனையுடன் நாடு திரும்பினார்கள்.

முதல் போட்டி (12 ஓவர்)
முதல் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற கேப்டன் முத்து பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரராக களம் இறங்கிய துணை கேப்டன் ரவிசங்கர் சிறப்பான தொடக்கம் அளித்தார். ஆனால் பின்னர் வந்த வீரர்கள் அதை பயன் படுத்த தவறினார்கள். 11 ஓவரில் 58 ரன்கள் எடுத்த நிலையில் செல்வா கடைசி ஓவரை பந்து வீச வந்தார். மிகவும் எதிர் பார்க்கப்பட்ட ஞான ஒலி செல்வாவின் பந்து வீச்சில் போல்ட் ஆகினார். செல்வா கடைசி ஓவரை சிறப்பாக வீசி 2 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார். கடைசியில் 12 ஓவரில் 62 ரன்களை வெற்றி இலக்காக ஜாவீத் அணியினருக்கு முத்து அணியினர் நிர்ணயித்தனர்.

வடிவேல் மற்றும் ஜெபசீலன் தொடக்க ஆட்ட காரர்களாக களம் இறங்கினர். ஜெபா முதல் பந்தில் duck out ஆகி அதிர்ச்சி அளித்தார். நிலைத்து நின்ற வடிவேல் அணியின் ஸ்கோர் 56 ரன்கள் இருந்த நிலையில் ஆட்டம் இழந்தார். அதிரடி ஆட்டக்காரர் சங்கர் கடைசியில் ஒரு சிக்ஸர் அடித்து அழகாக ஆட்டத்தை முடித்து வைத்தார்.

இரண்டாவது போட்டி
முதலில் பேட் செய்த முத்து அணியினர் இந்த தடவை பொறுமையாக விளையாடி 72 ரன்களை எடுத்தனர். ஜாவீத் அணியில் அணைத்து பந்து வீச்சாளர்களும் சிறப்பாக பந்து வீசினார்கள். ஆனால் ஜெப சீலன் வீசிய ஒரு ஓவரில் துணை கேப்டன் ரவி ஷங்கர் அதிரடியாக விளையாடி இரண்டு சிக்ஸர் மற்றும் ஒரு பௌண்டரி அடித்து தூள் கிளப்பினார். இந்த ஒரு ஓவர் தான் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. மிகவும் அற்புதமாக விளையாடி கொண்டு இருந்த ரவிசங்கர் களத்தில் இருக்கும் போது அவர்களின் ஸ்கோர் விரைவில் 100 ஐ தாண்டும் என்ற நிலையில் இருந்தது. ஆனால் பத்மநாபன் அற்புதமாக அடித்த DIRECT THROW வினால் ரவிசங்கர் பரிதாபமாக ரன் அவுட் ஆனார்.

72 ரன்களை விரட்டிய ஜாவீத் அணியினர் தொடக்கம் முதல் சீரான இடை வெளியில் விக்கெட்களை இழந்த வண்ணம் இருந்தனர். அதிரடி ஆட்டக்காரர் சங்கரும் முக்கியமான கட்டத்தில் சிக்ஸர் அடிக்க முயற்சி செய்து அவுட் ஆனார். கடைசி ஓவரில் 18 ரன்கள் தேவை என்ற நிலையில் விளையாடிய சூர்யா பாபு 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார். இதனால் 16 ரன்கள் வித்தியாசத்தில் முத்து அணியினர் வெற்றிப்பெற்றனர்.

மூன்றாவது போட்டி
வீரர்கள் பற்றாக்குறையால் அணிக்கு 9 பேர் என்று ஒதுக்க பட்டது. சூர்ய பாபு முத்து கிருஷ்ணன் அணிக்காக விளையாடினார். போட்டி DUCKWORTH LOUIS METHOD முறை படி 12 ஓவரில் இருந்து 10 ஓவராக மாற்றப்பட்டது.

DASHES கோப்பையை கைப்பற்றுவது யார் என்பதை தீர்மானிக்கும் முக்கிய போட்டியாக இது விளங்கியது.

இந்த முறையும் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த முத்து அணியினர் ஆரம்பத்தில் இருந்தே மிகவும் பதட்டமாக விளையாடினர். முக்கியமான இந்த போட்டியில் சீரான இடை வெளியில் விக்கெட்களை இழந்த அவர்கள் இறுதியில் வெறும் 22 ரன்களில் ஆட்டம் இழந்தனர்.

BATTING FORM இன்றி தவிக்கும் செல்வா மற்றும் கார்த்திக் J இருவரும் துவக்க ஆட்ட காரர்களாக களம் இறங்கினர். ஆமை வேகத்தில் விளையாடிய இருவரும் ரன்கள் எடுக்க மிகவும் திணறினார்கள். இருவரும் 5 வது ஓவரில் அவுட் ஆனார்கள். பின்னர் வந்த பத்மநாபன் மற்றும் DASHES FOUNDER அருண் குமார் அற்புதமாக விளையாடி தங்கள் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். இறுதியில் ஜாவீத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, DASHES SERIES யும் 2-1 என்ற கணக்கில் வென்றது.

இந்த வார முக்கிய அம்சங்கள்:

1. முதல் போட்டியில் பந்து வீசிய ரவிசங்கர் வடிவேலன் கிரீசை தாண்டி சென்றதற்காக கடுமையாக வாக்கு வாதம் செய்தார். அப்போது ரசிகர்கள் மைதானத்தில் நுழைந்து STUMPS ஐ பிடுங்கி ரகளை செய்தனர். போலீசார் தலையிட்டு ரசிகர்களை அமைதி படுத்தினர். பின்னர் போட்டி நடை பெற்றது.

2. இரண்டாவது போட்டியில் பத்மநாபன் அருமையாக DIRECT HIT செய்து இரண்டாவது ரன் எடுக்க ஆசை பட்ட ரவிசங்கரை ரன் அவுட் செய்தார். அது அவுட் இல்லை என்று ரவிசங்கர் மறுபடியும் ஆட்சேபம் தெரிவித்தார். ஆனால் மூன்றாவது நடுவர் TV REPLY யில் பார்த்த போது அவர் CREASE -க்கு நீண்ட தொலைவில் இருப்பது தெரிய வந்ததால் அவுட் என தெரிவித்ததால் ரவி வெளியேறினார்.

3. முதல் போட்டியில் அருமையாக பேட் செய்த வடிவேல் அற்புதமாக சிக்ஸர் மற்றும் பௌண்டரி அடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை பரவச படுத்தினார்.

4. எப்போதும் பந்தை ரயில்வே TRACK கிற்கு அடிக்கும் ரவிசங்கர் இந்த தடவை ஒரு முறை கூட அடிக்க வில்லை.

5. பில்டிங் செயட்டிம் போது முத்துவின் மணியில் பந்து பட்டது. ரவிசங்கர் அதை கிண்டல் செய்தார்.

6. இரண்டாவது போட்டி முடிவில் ஜாவீத் அணியின் துணை கேப்டன் செல்வா முத்துவிடம் சென்று கோப்பையை பகிர்ந்து கொள்ளலாம் என்று கூறினார். இதை நிராகரித்த முத்து, கோப்பையை ஒருவரே பெற வேண்டும் என்பதில் குறியாக இருந்தார். இறுதியில் கோப்பையை ஜாவீத் இடம் பறி கொடுத்தார்.

7. தொடரை இழந்த சோகத்தில் முத்து அணியினர் மைதானத்திலேயே மது அருந்தி சோகத்தை போக்கினர்.

8. குடியரசு தினத்தை முன்னிட்டு போட்டி நடை பெற்ற அரங்கத்தை சுற்றிலும் போலீஸ் படை குவிக்க பட்டது.

9. தொடர் நாயகனாக வடிவேல் தேர்ந்து எடுக்க பட்டார்.

10. கடந்த முறை TCG யில் சுற்று பயணம் மேற்கொண்ட யூசுப் தலைமையிலான அணி 2-0 என்ற கணக்கில் படு தோல்வி அடைந்தது. ஆனால் இந்த முறை முத்து தலைமையிலான அணி கவுரவமாக 2-1 என்ற கணக்கில் தோற்றனர்.

11. சிறப்பான பந்து வீச்சினால் தான் தங்களால் வெற்றி பெற முடிந்தது என்று ஜாவீத் பின்னர் நிருபர்களிடம் தெரிவித்தார்.

12. இந்த தொடர் மூலம் தாங்கள் நல்ல பாடம் கற்று கொண்டதாகவும், தங்கள் தவறுகளை திருத்தி கொண்டு அடுத்த முறை நிச்சயம் கோப்பையை கைப்பற்றுவோம் என்று கேப்டன் முத்து பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் தெரிவித்தார்.

13. தொடரை வென்ற வெற்றி கேப்டன் ஜாவீத் DASHES கோப்பையை ரசிகர்களின் பலத்த கர கோஷத்திநிடையே அமெரிக்க அதிபர் ஒபாமா விடம் இருந்து பெற்று கொண்டார்.

14. யார் வெற்றி பெற்றாலும் தொடர் இனிதே நடை பெற்று முடிந்ததில் அனைவருக்கும் பரம திருப்தி இருந்தது.

THATS ALL FROM THE GROUND. MEET YOU AGAIN NEXT WEEK.. IN THE SAME GROUND...