Good Morning Everyone....
This week DASHES Series matches have been played at TCG (Trisulam Cricket Ground). Despite of good weather, we have played just 2 matches. And, the series was drawn at 1-1. We started playing 3rd match. But it was abandunt due to political interference.
The two teams were captained by Karthik SM and Jebaseelan.
Karthik Team:
1. Javeed
2. Manikandan
3. Sriram
4. Padmanabhan
5. Arunkumar
6. Karthik SM (C)
Jebaseelan Team:
1. Selva
2. Vadivel
3. Karthick J
4. Parvathanathan
5. Jebaseelan (C)
6. Palani
7. Ramalingam
Match Results:
First Match (8 Overs)
முதல் போட்டியில் ஜெபசீலன் டாஸ் வென்றார். அவர் பேட்டிங்கை தேர்வு செய்தார். கார்த்திக் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினார்கள். ஜெபா, செல்வா, கார்த்திக் J மூவரும் ரன் எடுக்க தவறினார்கள். வடிவேல் சிறப்பான ஆட்டத்தை வெளி படுத்தினார். அவர் 2 சிக்ஸர் அடித்து அசத்தினார். பர்வதநாதன் தனது பங்கிற்கு 2 ரன் எடுத்தார். முடிவில் ஜெபா அணியினர் 17 ரன்களுக்குள் சுருண்டனர். பத்மநாபன் 3 விக்கட்கள் எடுத்து தூள் கிளப்பினார்.
18 ரன்கள் என்ற எளிய இலக்குடன் விளையாடிய கார்த்திக் அணியினர். முதல் ஓவரில் தங்கள் கேப்டன்-ஐ இழந்தனர். கார்த்திக் செல்வா பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இறுதியில் அவர் அணி 4.1 ஓவரில் வெற்றி இலக்கை அடைந்தது. ஜாவீத் மற்றும் மணி இறுதி வரை அவுட் ஆகாமல் இருந்தனர்.
Second Match: (8 Overs)
இந்த போட்டியில் கார்த்திக் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்த போட்டியில் பழனி மற்றும் மணி ஜெபா அணியில் விளையாடினர். பர்வதநாதன் கார்த்திக் அணிக்கு சென்றார்.
முதலில் விளையாடிய கார்த்திக் அணியினர் பெரிய ஸ்கோர் அடிக்க தவறினர். அவர்கள் 22 ரன்கள் மட்டுமே எடுத்தனர். பல வாரங்கள் கழித்து ஜாவீத் இன்று சிக்ஸர் அடித்து ரசிகர்களை பரவசப்படுத்தினார். அவர் மட்டும் 10 ரன்கள் எடுத்தார்.
பின்னர் விளையாடிய ஜெபா அணியினர் மிகவும் திணறினார்கள். 23 ரன்களை 8 ஓவரில் எடுத்தால் போதும் என்ற நிலையில் அவர்கள் ரன் எடுக்க மிகவும் சிரமபட்டார்கள். கார்த்திக் அணியினரின் பந்து வீச்சு மிகவும் சிறப்பாக இருந்தது. கார்த்திக் J, வடிவேலன், ஜெபா, மணி மற்றும் ராமலிங்கம் அனைவரும் குறைந்த ரன்களுக்கு அவுட் ஆனார்கள். 7 ஓவருக்கு இவர்கள் வெறும் 12 ரன்களை அடித்து இருந்தனர். இப்போட்டியிலும் வெற்றி கார்த்திக் அணியினருக்கு செல்லும் நிலையில் இருந்தது.
கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவை என்ற பரபரப்பான சூழ்நிலையில், பர்வதநாதன் பந்து வீச வந்தார். அவர் வீசிய முதல் பந்தை செல்வா பவுண்டரிக்கு விரட்டினார். இப்போது வெற்றிக்கு 5 பந்தில் 7 ரன்கள் வேண்டும். ஓவரின் 2 பந்தில் 2 ரன்கள் எடுத்தார். மூன்றாவது பந்தில் ஒரு ரன் எடுத்தார். நான்காவது பந்தை பழனி சந்தித்தார். அதில் அவர் ரன் அடிக்க தவறினார். இன்னும் இரண்டு பந்தில் 4 அடித்தால் வெற்றி என்ற நிலையில், 5 வது பந்தில் ஒரு சிக்ஸர் அடித்து தனது அணியை பழனி வெற்றி பெற செய்தார். பழனி சிக்ஸர் அடித்த போது போட்டி அரங்கமே அதிரும் வண்ணம் ரசிகர்கள் பலத்த கரகோஷம் எழுப்பினர்.
இந்த வார DASHES SERIES சிறப்பம்சங்கள்:
1. ஜோசப், அமர்நாத், ராஜ்குமார், நாராயணன், வினோத், சங்கர் மற்றும் பலர் இந்த வாரம் போட்டிக்கு வர வில்லை. அதனால் போட்டி கொஞ்சம் சுவாரசியம் இல்லாமல் இருந்தது.
2. பர்வதநாதன் தனது சகோதரரை போட்டிக்கு அழைத்து வந்தார். இதனால், DASHES series - இல் விளையாடும் நான்காவது சகோதரர்கள் என்ற பெருமை பெற்றனர். ஏற்கனவே இத்தொடரில் WAUGH (STEAVE WAUGH & MARK WAUGH), பதான் சகோதரர்கள் (YUSUF PATHAN & IRFAN PATHAN) மற்றும் Malik சகோதரர்கள் (Aman Malik & Mustak Malik) விளையாடி இருக்கின்றனர்.
3. கடந்த வாரம் பெய்த கனமழையின் காரணமாக மைதானத்தில் சில இடங்களில் தண்ணீர் தேங்கி கிடந்தது.
4. துணை முதல் அமைச்சர் அவ்வழியே செல்ல இருப்பதால் DASHES SERIESக்கு பாதுகாப்புக்கு அளிக்க முடியாமல் போட்டியை கைவிட போலிசார், DASHES நிர்வாகத்தை தாழ்மையுடன் வேண்டி கொண்டனர். இதை பெருந்தன்மையுடன் ஏற்று கொண்ட DASHES நிர்வாகம் போட்டிகளை உடனே நிறுத்தியது.
5. முஸ்தாக் மற்றும் யோகேஷ் ஒரு போட்டி கூட விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.
6. தொடர் நாயகன் விருது வடிவேலனுக்கு வழங்க பட்டது.
7. இரண்டு போட்டிகளே நடை பெற்றதால் இந்த வார தொடர் சமனில் முடிந்தது. கோப்பையினை இரண்டு கேப்டன்களும் பெற்று கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment